நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்,விசிக உள்பட ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் மற்ற கட்சி தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளதாக மதிமுகவினர்.தி.மு.க கூட்டணியில் இடப்பங்கீடு உரிய முறையில் வழங்கப்படவில்லை' என அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு உதாரணமாக ஒரு உட்கட்சி மோதல் சம்பவம் கரூரில் நடைபெற்றது. மேலும் ம.தி.மு.க முகாமில் திமுக குறித்து வெளிப்படையாகவே அதிருப்தி பேச்சுக்கள் எழுந்துள்ளன. பல மாவட்டங்களில் தி.மு.க, ம.தி.மு.க இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சந்தித்துப் பேசியுள்ளார்.அனைத்தும் சுமூகமாகத்தான் நடக்கிறது கூட்டணி பேச்சு வார்த்தை பிரச்சனையில்லை என அவர் உதடு கூறினாலும் அவரது உள்ளக்குமுறல் ஊரறிந்தது தான். பல மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகளைப் பழிவாங்கும் வேலைகளைத்தான் தி.மு.க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூர், கீழக்கரை ஆகிய நகராட்சிகளில் ஓர் இடத்தைக்கூட தி.மு.க ஒதுக்கவில்லை. பரமக்குடியைப் பொறுத்தவரையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 2 இடங்களில் மதிமுக வென்றது. அங்கு 33 வார்டுகள் உள்ளன. அங்கு ம.தி.மு.கவுக்கு 2 இடமும் சி.பி.எம், சி.பி.எம் கட்சிகளுக்கு தலா 2 இடங்களையும் ஒதுக்கியுள்ளனர். ஆனால், நாங்கள் அங்கு 3 வார்டுகளைக் மதிமுகவினர் கேட்டுள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சியிலும் 3 வார்டுகளைக் கேட்டுள்ளனர். ஆனால் அவை ஒதுக்கவில்லை. அதே நகராட்சியில் 5 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளனர். பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறிய கட்சிகள் யாரும் வேண்டாம்’ என்ற மனநிலையில் தி.மு.கவினர் இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது’.
இதே நிலைமை தான் ராமேஸ்வரம் நகராட்சிக்கும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அவர்கள் கேட்டது கிடைக்கவில்லை.
கடந்த 31 ஆம் தேதி ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர், 3 வார்டுகளைக் கொடுத்துவிட்டு 2 இடங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டுள்ளார். திமுக தரப்பில் இருந்து ஓர் இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்து வெற்றி பெறலாம்' எனக் கூறினர்.
இது சரிவராது. உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்குப் பதிலாக எங்களால் தனியாக நிற்க முடியாதா?’ என திமுக மதிமுகவினரிடையே வாக்குவாதம் நடைபெற்று பின்னர் ஒருவழியாக ஒப்பந்தம் கையொப்பமானது. கீழக்கரை நகராட்சியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு கூறினர். முஸ்லிம் லீக், வி.சி.க ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளிடமும் இதையே தெரிவித்துள்ளனர்.
இது கிட்டத்தட்ட ஜெயலலிதா கையாண்ட யுத்தி தான், ஆனால் மதசார்பற்ற கட்சி என்று நம்பி வரும் சிறிய கூட்டணிகளை சரியான முறையில் அணுக திமுக தலைமை தவறி வருகிறது.அதற்கு காரணம் கூட நேரடியாக தலைமை ஈடுபடாமல் இருப்பது தான் என்கின்றனர் அரசியல் வட்டரதினர்.