இளையான்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரியில் மாநில இளைஞரணிச் செயளாலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோர்களுக்கு வேட்டி , சேலை மற்றும் அறுசுவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியக் கவுன்சிலர் முருகன் தலைமையில், பெரும்பச்சேரி ஊராட்சித்தலைவர் சாவித்திரி முருகன், ஊராட்சி செயலர் கண்ணன் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பானர் சுப.மதியரசன் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேட்டி , சேலை மற்றும் அருசுவை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

முன்னதாக பெரும்பச்சேரி பகுதியியை சேர்ந்த ரவி தலைமையில் குப்புச்சாமி , அனந்தன், சங்கு, குப்புச்சாமி, சங்கர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு வேஷ்டி அணிவித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட விவசாய அணி காளிமுத்து, அவைத் தலைவர் பெரியசாமி, கூட்டுறவு சங்கத் தலைவம் சுப. தமிழரசன், தகவல் தொழிநுட்ப அணி சுப. அன்பரசன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.