மதுரையிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
ஜல்லிக்கட்டு போட்டிகள் நாட்டு மாடுகள் பங்கேற்பது குறித்த கேள்விக்கு:
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் உள்ள ஒரு தீர்ப்பு மத்திய அரசும் உரிய அரசாணையை வெளியிட்டுள்ளது அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உள்ள வழக்கு குறித்த கேள்விக்கு:
ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
திருநெல்வேலி பள்ளி விபத்து குறித்த கேள்விக்கு:
பள்ளி மாணவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்து அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
பெண் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் தொந்தரவு குறித்த கேள்விக்கு:
பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மீது பாலியல் குற்றச்சாட்டு அதிகரிப்பது குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன், என்றார்.