• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தி.மு.க இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை தலைமையில், வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட புளியங்குடி கடைய நல்லூர் செங்கோட்டை நகராட்சி பகுதிகளிலும், தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் வாசுதேவநல்லூர் ஒன்றிய பகுதிகளிலும் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி ஒன்றியம் கணக்கப்பிள்ளை வலசையில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கியும், புளியரை அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கியும், தேன்பொத்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்களும், செங்கோட்டை நகரத்தில் கேக் வெட்டி கழக நிர்வாகிகளுடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், நகர செயலாளர் ரஹீம்புதூர், பேரூர் கழக செயலாளர் சீதாராமன் கலந்துகொண்டனர். கடையநல்லூர் நகரத்தில் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தும், புளியங்குடி நகரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் ஒன்றிய குழு தலைவர் சுப்பம்மாள், துணைத் தலைவர் ஐ.வேந்திரன், புதுக்குடி பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி இன்பராஜ், பஞ்சாபத்து தலைவர்கள் சித்ரா, சொரணம், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பூங்கொடி, கடையநல்லூர் நகர செயலாளர் சேகனா, வார்டு செயலாளர்கள் ஷார்ப் கணேசன் முருகையா, முன்னாள் நகர செயலாளர் முகமதலி, டாக்டர் சஞ்சீவி, மூ.வன்னா மசூது, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வி முருகேசன், அப்துல்வ காப், துணைத் தலைவர்கள் ராசையா விஸ்வாசுல்தான், வடக்கு மாவட்ட அலுவலக பொறுப்பாளர் மகேஷ், புதுக்குடி கிளைச் செயலாளர் பேச்சியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்