P.S.வினோத்ராஜ் இயக்கத்தில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மூலம் தயாரிப்பில் உருவான படம் தான் ‘கூழாங்கல்’.
இப்படத்தை இயக்கிய இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 30 நாட்களில் தயாரித்து முடிக்கப்பட்டது.
ரோட்டர்டாம் 50வது சர்வதே திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு உயரிய விருதான ‘டைகர்’ விருதினை வென்றது. இந்தநிலையில், இப்படம் 2022-ம் ஆண்டில் நடைபெறும் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை விக்னேஷ் சிவன் திடீரென்று சந்தித்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் “ஆஸ்கார் விருதிற்கு தேர்வான ‘கூழாங்கல்’ படத்திற்கு உங்களின் வாழ்த்திற்கும், ஆதரவிற்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.