• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பலி!! ஒருவர் படுகாயம்..,

ByP.Thangapandi

Mar 2, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இருசக்கர வாகனம் மீது நெல்லிக்ககாய் ஏற்றி வந்த வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது., இதில் இருசக்கர வாகனத்தில் பயனித்த காமராஜ் நகரைச் சேர்ந்த கணேசன், உத்தப்பநாயக்கணூரைச் சேர்ந்த ராஜதுரை என்ற இருவர் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.,

மேலும் இந்த விபத்தில் உத்தப்பநாயக்கணூரைச் சேர்ந்த காசி என்பவர் படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.,

தகவலறிந்து விரைந்து வந்த உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,