

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை என்ற கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் அதனை அருகே பால்வாடி செயல்பட்டு வருகிறது. சசிகுமார் என்பவரது மகள் 8 வயதுடைய சோபிகா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4ம்வகுப்பு படித்து வருகிறார். மேலும் கண்ணப்பன் மகள் 4 வயதுடைய சிறுமி இஷ்மிகா அங்கன்வாடி பள்ளியில் படித்து வருகிறார். இருவரும் மதியம் பள்ளி முடிந்து மகள் வீட்டுக்கு வரவில்லை அறிந்த பெற்றோர்கள் பால்வாடிக்கு சென்று குழந்தை இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதனை அடுத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தையை தேட ஆரம்பித்தனர். பின்னர் பள்ளி அருகே உள்ள கண்மாயில் உடல் மிதந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட இரு குழந்தைகளின் உடலை வைத்து பள்ளி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்..,

பள்ளியின் ஆசிரியர்கள் கவனக்குறைவால் தான் குழந்தைகள் வெளியே சென்றனர் என்று குழந்தைகளை எடுத்துச் செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளின் மரணம் இப்பகுதிகள் பெறும் சோகத்தை ஏற்படுத்திள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த இளையான்குடி காவல்துறையினர் குழந்தைகளின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

