


கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அடையாள அட்டை & புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல், பாண்டி முன்னிலை வகிக்க முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ்.கௌரி தலைமையேற்று பள்ளி மாணவர்களுக்கு நூலக அடையாள அட்டைகளையும் புத்தகங்களையும் வழங்கினார்.
முன்னதாக இந்நிகழ்வில் எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய “வைர நிலம்”! என்ற நூலை முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கௌரி அறிமுகம் செய்தார். இந்நூல் அறிமுக விழாவில் நூலக நண்பர்கள் திட்டத்தைச் சார்ந்த முத்துக்கண்ணன் ரமேஷ் கண்ணன் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் நூலகத்தின் தேவை குறித்து உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தேசிய நல்ல ஆசிரியர் கண்ணப்பன் மற்றும் நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் ரமணவிகாஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் நூலக வாசகர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட மைய நூலகர் முத்துக்குமார் வரவேற்றார். நூலகர் கனகராஜ் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை மாவட்ட மைய நூலக நண்பர்கள் திட்டத்தை சார்ந்த தன்னார்வலர் குழு ஏற்பாடு செய்திருந்தனர்.



