• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிக்கையாளர் 2பேர் கைது..,

ByS.Ariyanayagam

Aug 22, 2026

திண்டுக்கல்லில் தனியார் நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிகையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல், பழனி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தை தவறாக சித்தரித்து பதிவிடுவதாக கூறி ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாக போலி பத்திரிகையாளர்கள் மீது நிறுவனத்தின் மேலாளர் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக போலி பத்திரிகையாளரான செட்டிநாயக்கன்பட்டி சிவபுரத்தை சேர்ந்த செந்தில்குமார்(49), திண்டுக்கல், கிழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த ராமர்(47) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.