• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பழமைவாய்ந்த மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா..,

ByP.Thangapandi

Aug 22, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிக்குட்பட்ட அயன்மேட்டுப்பட்டி- புத்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.,

முன்னதாக கும்பாபிஷேக விழாவானது கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் காலை யாகசாலை, இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து பூர்ணாகுபதி பூஜை நடைபெற்றது.,

அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடாகி மங்கள இசை முழங்க மலைராமன் கோவில் நுழைவு வாயில் கோபுரத்திற்கு சிவாச்சாரியார் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.,

தொடர்ந்து மலை ராமன் மற்றும் ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.,

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர் மற்றும் மலைராமன் சாமி க்கு தீபாதாரணை காண்பிக்கப்பட்டது.,

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா அரோகரா என கோசங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.,

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.,