• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பட்டாசு ஆலைகள் தமிழக அரசு கட்டுப்பாடுகள் தளர்வு..,

ByK Kaliraj

Aug 22, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக தொழிலாக பாதுகாப்பு துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், போலீசார் ,உள்ளிட்ட துறைகள் சார்பாக பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் தற்காலிக உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் பட்டாசு ஆலைகள் ஒரு மாதமாக மூடி கிடந்தன .மற்ற ஆலைகள் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டமும் நடத்தின . இதனால் பட்டாசு உற்பத்தி முடங்கியது பட்டாசு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு கட்டுப்பாடுகள் தளர்வு செய்ததால் ஆலைகள் திறக்கப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகின்றன.

கேரளா மாநிலத்திலிருந்து ஓணம் பண்டிகைக்கு பெறப்பட்ட ஆர்டர்கள் மற்றும் அடுத்த மாதம் விநாயகர் சதூர்த்தி ஆர்டர்கள் கிடைத்துள்ளதால் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பட்டாசு ஆலை தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த ஒரு மாதமாக பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டும் பட்டாசு விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.