• Mon. Apr 21st, 2025

நிதி மோசடி – குண்டர் சட்டத்தில் இருவர் கைது

BySeenu

Mar 14, 2025

18 கோடி ரூபாய் நிதி மோசடி – குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது – கோவை மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

நிதி மோசடி வழக்கில்,18 கோடியே 40 லட்சத்து 44 ரூபாய் மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவிசந்தர் மற்றும் தனசேகர் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க ஆலோசனை வாரியம் உறுதி செய்துள்ளது. இந்த இருவர் மீதும் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இதுவரை 171 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், இந்தியா முழுவதும் 32 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டு உள்ளன.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட ரவிசந்தரிடம் இருந்து 28 வங்கிக் காசோலை புத்தகங்கள், 29 ஏ.டி.எம் அட்டைகள், 4 கைப்பேசிகள் மற்றும் 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், தனசேகரிடம் இருந்து 2 வங்கிக் காசோலை புத்தகங்கள், 11 ஏ.டி.எம் அட்டைகள், 2 கைப்பேசிகள் மற்றும் 3 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மூலம் மேலும் ஏதேனும் மோசடி நடந்து உள்ளதா ? என்பது குறித்தும் கோயம்புத்தூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.