

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழசிவல்பட்டி வனப்பகுதியில் விற்பனைக்காக 17 மயில்களை வேட்டியாடிய சம்பவம் அப்பகுதியல் அனைவரையும் வேதனையடைய செய்துள்ளது. இது தொடர்பாக இருவரை கைது செய்து திருப்பத்தூர் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள கீழசிவல்பட்டி வனப்பகுதியில் தேசிய பறவையான மயில்கள் வேட்டியாடி வருதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து கீழசிவல்பட்டி, இளையாத்தங்குடி பகுதியில் வனத்துறையினர், வாகன சேதாதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழசிவல்பட்டியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனங்கள் வந்த இருவரை சேதனையிட்டனர். அவர்கள் கொண்டு வந்த இரு சாக்கு பையில் உயிரிழந்து, இறகுகள் நீக்கபட்ட நிலையில் 17 மயில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரிடம் விசாரணை செய்ததில் இருவரும் பொன்னமராவதியை சேர்ந்த ராஜா(35) மற்றும் தியாகராஜன் என்பதும், தீபாவளிக்கு மயில்கறியினை விற்பனை செய்வதற்காக வனப்பகுதியில் மயில்களை வேட்டியாடியது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் இறந்த 17 மயில்களையும், வேட்டியாட பயன்படுத்திய இரு இருசக்கர வானங்களையும் பறிமுதல் செய்தனர். உணவிற்காக தேசிய பறவையான மயில்கள் வேட்டியாடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமல்லாது அனைவரையும் வேதனையடை செய்துள்ளது.
