

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அமைதியான முறையில், பாதுகாப்பாக, நல்ல முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் 1500 போலீசார் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது குடும்பத்துடன் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் நேரடியாக சென்று, அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி, இனிப்புகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குடும்பத்துடன் நேரடியாக வந்து உற்சாகப்படுத்தி, தீபாவளி பண்டிகையை சிறப்பித்தது மிக மகிழ்ச்சியளிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
