முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு தேசிய லீக் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். இவரது தந்தை தவசலிங்கம் (93) உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய செயலாளர் இ..செய்யது ஜஹாங்கீர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.எல் செம்மல் சேட் முன்னாள் தலைவர் சிவகாசி முஸ்லிம் வர்த்தக சங்கம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்