எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, எம்ஜிஆர் உருவசிலைக்கு சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-ன் 108-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் ஆணைக்கிணங்க சிவகங்கை நகரில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலைக்கு சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் PR.செந்தில்நாதன்,MLA., மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் G.பாஸ்கரன், சிவகங்கை நகர் கழக செயலாளர் NM.ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இராமு.இளங்கோவன், ஒன்றிய கழக செயலாளர்கள் – செல்வமணி, சேவியர்தாஸ், ஸ்டீபன் அருள்சாமி, கருணாகரன், பழனிச்சாமி, சிவாஜி, கோபி, கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் – சிவதேவ்குமார், இளங்கோவன், கோட்டையன், செந்தில்முருகன், குழந்தை, மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து, காளையார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், இளைஞர் பாசறை மணக்கரை பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
