அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகளின் முதலாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சமுதாயகூடத்தில் கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ரோட்டு அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்கள், பாதுகாவலர், அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சமுதாயகூடத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி நிறுவனத் தலைவர் வடிவேல் சூர்யா நிறுவன செயலாளர் அமுதா நிறுவன பொருளாளர் முருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக EID parry ஜென்ரல் மேனேஜர் மணிகண்ட வெங்கடேசன், EID parry ஜென்ரல் அசிஸ்டன்ட் மேனேஜர் ராஜேஷ், வீனஸ் பவுண்டேஷன் பூமிநாதன், EID parry HR புருஷோத்தமன், 26 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மதி, மற்றும் மணிமாறன் சரவணன் தமிழ்ச்செல்வன் மாயக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.


