நாட்டரசன் கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி. 20 காளைகள் ஏராளமான வீரர்கள் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மறைந்த முன்னாள் பேரூராட்சித் தலைவர் நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்ற நிலையில் 20 காளைகள் பங்கேற்றத்துடன் ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

சிவகங்கை அடுத்துள்ள நாட்டரசன் கோட்டை பேரூராட்சி தலைவராக இருந்தவர் முருகானந்தம். இவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். மூன்றாம் ஆண்டான இன்று பேரூராட்சி தலைவர் நினைவாக நாட்டரசன்கோட்டை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டானது நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 காளைகள் பங்கேற்றதுடன் அதனை பிடிக்க காளை ஒன்றுக்கு ஒன்பது வீரர்கள் என 180 வீரர்கள் பங்கேற்று காளையை அடக்கினர். ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடம் ஒதுக்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்ற காளைக்கும், வெற்றி பெற்ற வீரர்களுக்கும் தல ஐந்தாயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் அல்லாமல் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
