

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் -ரால் அடையாளம் காட்டப்பட்ட அதிமுகவின் முன்னாள் பாராளுமன்ற முதல் உறுப்பினர் மாயத்தேவர் உடலுக்கு திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அதிமுக கழக பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் -ரால் அடையாளம் காட்டப்பட்டு அதிமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இரட்டை இலை சின்னத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாய தேவர் இன்று சின்னாளபட்டியில் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அதிமுகவின் கழக பொருளாளர் முன்னால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். கழக அமைப்புச் செயலாளர் மருதராஜ், அம்மா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் . முன்னாள் எம்பி உதயகுமார் உள்ளிட்டோர் மற்றும் திண்டுக்கல் மேற்கு கிழக்கு அதிமுக கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
