முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் மறைவிற்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ராஜாங்கம் மரணம் அடைந்தார்.இதை அடுத்து அந்த தொகுதியில் மே இருபதாம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அதிமுக அந்த தேர்தலில் முதல் முறையாக களம் கண்டது அதிமுக சார்பில் வேட்பாளராக மாய தேவர் நிறுத்தப்பட்டார். அதிமுகவுக்கு எப்படி எம்ஜிஆர் ஜெயலலிதா ஒரு முகமாக இருக்கிறார்களோ அதே போல் தான் இரட்டை இலையும் இந்தத் தேர்தலில் தான் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு வழங்கப்பட்டு அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மாய தேவர். இதன் மூலம் அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. தீவிர எம்ஜிஆர் விசுவாசியான மாயத் தேவர், பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி தம்பதியினருக்கு 15 அக்டோபர் 1935-இல் உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேனிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக்கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகறிஞராக பணிபுரிந்தவர்.பின்னர் 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக எம்பியாக தேர்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 1980ஆம் ஆண்டில் திமுகவில் சேர்ந்து எம்பியாகவும் மாயத்தேவர் இருந்தார். அவரிடம் திமுகவில் தீவிர அரசியலில் இருந்த மாயத்தேவர், பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். வயது முதிர்வு காரணமாக திண்டுக்கல் சின்னாளபட்டியில் மனைவியுடன் வசித்து வந்த இவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. இதனையடுத்து அவரது மறைவுக்கு அதிமுகவினர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 88 வயதான இவர் இன்று சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். இதனை அடுத்து மாயத்த தேவரின் உடலுக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.