• Fri. Mar 29th, 2024

சார்பு ஆய்வாளரின் அத்துமீறல் – தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

Byதரணி

Aug 27, 2022

மதுரையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சார்பு ஆய்வாளரின் ஆத்துமீறலால் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம் இவர் குடியிருக்கும் கீழ் வீட்டில் முத்து பிரியா என்பவருக்கு நான்கு லட்சம் ஒத்திக்கு விட்டுள்ளார் ஒரு வருடத்திற்கு மேல் குடியிருந்து வந்துள்ளார் அப்பொழுது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது முத்து பிரியாவிடம் பஞ்சவர்ணம் வட்டிக்கு ஒன்றரை லட்சம் பணம் வாங்கியுள்ளார் , மேலும் முத்து பிரியா வீட்டை காலி செய்யும் பொழுது ஒத்தி பணம் 4 லட்சம் ரூபாயும்,வட்டியும் மற்றும் ஒன்றரை லட்ச ரூபாயும் முத்து பிரியாவிடம் தந்துள்ளார் ஆனால் முத்து பிரியா என்பவர் மதுரை காவல் நிலையத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் பஞ்சவர்ணம் என்பவர் மேல் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு பஞ்சவர்ணம் தர மறுக்கிறார் என்று ஒரு பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார் என கூறப்படுகிறது
அதை விசாரித்த சார்பு ஆய்வாளர் தாமோதரன் முத்து பிரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு பல மாதங்களாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்து ஒன்றரை லட்ச ரூபாய் நீ கண்டிப்பாக மூன்று மாதத்தில் தரவேண்டும் இல்லை என்றால் உன்னை ரிமாண்ட் பண்ணி விடுவேன் என்று மிரட்டி காவல் நிலையத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் நேரடியாக தாமோதரன் மற்றும் தலைமை காவலர் ஒருவர் பஞ்சவர்ணம் குடியிருக்கும் வீட்டிற்கு உள்ளே சென்று காசு கேட்டால் தர மாட்டியா நீ காவல் நிலையத்திற்கு வா என்று இழுத்து சென்றதாகவும் காவல் நிலையத்தில் வைத்து பணத்தை இப்பொழுதே தந்துவிடு இல்லையென்றால் இன்று நீ கண்டிப்பாக ஜெயிலுக்கு சென்று விடுவாய் என்று மிரட்டியதாலும் அடிக்கடி காவல் நிலையத்திலிருந்து என் வீட்டிற்கு வருவதால் எனக்கு அசிங்கமாக இருப்பதாலும் இன்று நான் இறந்து விடலாம் என்று மன உளைச்சலுக்கு ஆளாகி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எனது உடம்பில் ஊற்றிவிட்டு தீக்குளிக்க முயற்சித்தேன்.
காவல் நிலையத்தில் முன்பு இருந்த பொதுமக்கள் என்னை காப்பாற்றினார்கள் வாங்கிய அனைத்து பணத்தையும் நான் உண்மையிலேயே கொடுத்துவிட்டேன் ஆனால் நீ வட்டி மட்டும் தான் கொடுத்திருக்கிறாய் அசல் இன்னும் தரவில்லை என்று முத்து பிரியா பேச்சைக் கேட்டு சார்பு ஆய்வாளர் என்னை மிகவும் அசிங்கப்படுத்தியும் எந்த ஆதாரமும் இல்லாமல் என்னை விசாரணை செய்கிறார் மேலும் இவருக்கு ஆதரவாக டிஎஸ்பி தமிழரசியும் செயல்பட்டு வருவதாக கண்ணீர் மல்க பஞ்சவர்ணம் தெரிவித்தார் இவர்கள் மீது முதல்வர் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து விடுவேன் என்று தெரிவித்தார்.
மேலும் காவல் நிலையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் வீடு காலி செய்தல் பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடக்கூடாது. இந்த பிரச்சனை வந்தால் இதற்கு தனி தாசில்தார் ஒருவரை தமிழக அரசு நியமித்து உள்ளது. அவர்தான் விசாரிக்க வேண்டும் என்று அந்தந்த காவல் நிலையம் வாசல் முன்பே விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது .ஆனால் அதை பிற்படுத்தாமல் ஒத்தக்கடை சார்பு ஆய்வாளர் தாமோதரன் கண்டும் காணாமல் கண்ணை மூடி செயல்படுகிறார் இந்த பெண் கண்ணீருக்கு பதில் கிடைக்குமா? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட கண்காணிப்பாளர் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *