மதுரை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகளை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளார்.
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. இதன்படி களிமண்ணால் செய்யப்பட்டதும், சுற்றுச்சூழலை பாதிக்காத சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
