சில நாட்களுக்கு முன் திடீர் பெண் சாமியார் அவதார வீடியோவால், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தவர் அன்னபூரணி.இவர் யார்? எப்படி சாமியார் ஆனார் என்பதெல்லாம் கொஞ்ச நாட்கள் தெரியாமல் போனது.. ஆனால் இருக்கவே இருக்கு நமது சமூக வலைதளம் .. இவரை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்துவிட்டது.
“அன்னபூரணி அரசு அம்மா” என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார் திடீர் பெண் சாமியார் அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெறியாளராக இருந்த நிகழ்ச்சியில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக கலந்துகொண்டிருந்தார். அதன் பிறகு அன்னபூரணி சமூக வலைத்தள பக்கங்களில் இன்ஸ்ட்டன்டாக வைரலாகினார்.
இதுகுறித்து பிரபல தனியார் தொலைக்காட்சி இணையதளத்திற்கு பேட்டி ஒன்றும் கொடுத்திருந்தார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.அதில் அவர் கூறியது, அந்த வீடியோக்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அதேசமயம், மக்கள் ஏமாந்துப் போறாங்களேன்னு மனசு ரொம்ப கஷ்டமாவும் இருக்கு. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவது சரி கிடையாது. ஆனால், இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் காலில் மக்கள் விழுவது ரொம்ப ரொம்பத் தப்பான விஷயம். முட்டாள்தனமும்கூட. சாமி என்று சொல்வதை மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு நாட்கள் நாம் ஏமாற ரெடியாக இருக்கிறோமோ, அதுவரை நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறினார். ’நான் கடவுளின் அவதாரம்’ என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் அன்னபூரணியை வைத்து செய்தது பல மீடியாக்களும் ட்ரோல்களும், மீம்ஸ்களும். ஆனால் அசருவாரா நம்ம அன்னபூரணி…
இதோ தொடங்கிட்டாங்கள்ள ஆசிரமம்…அங்க சுத்தி இங்க சுத்தி இப்போ திருவண்ணாமலையில் புதிய ஆசிரமம் ஒன்றை தொடங்கியுள்ளார் பெண் சாமியார். இந்த ஆசிரமத்தில் பயிற்சி பெற பிரத்யேக உடை, உணவு பழக்க வழக்கங்கள் எதுவும் தேவை இல்லை என்றும், நடைமுறை வாழ்க்கையில் ஆன்மீக பயிற்சி அளிக்கும் ஆசிரமம் இது என்றும் அவர் கூறியுள்ளார். ம்ம்ம்… சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட ஆகி தற்போது ஆசிரமம் வாங்கும் வரை இவரது கை ஓங்கியுள்ளது…இதற்கு காரணம் யாரா இருக்கும்…? வேற யாரு நாம தான்.. ட்ரெண்டிங் என்ற பெயரில் சிலரை நாம் மேலும் ஊக்கப்படுத்திவிடுகிறோம் .. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இது….