• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தர்ணா போராட்டம்-

ByKalamegam Viswanathan

Dec 7, 2023

மதுரை தெற்கு வட்டார போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழ் நாடு அரசு பயன்பாட்டில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு ஆயுட்கால வரி விதித்து அதை 23தினங்களுக்குள் நவம்பர் 30க்குள் கட்ட வேண்டும் என அறிவித்துள்ளது.

அதில் புதிதாக வாங்கும் சுற்றுலா வாகனங்களுக்கு 20சதவீத ஆயுட்கால வாரியாகவும் பயன்பாட்டில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு 18.75சதவீதம் ஆயுட்கால வரி விதித்துள்ளது என்றும்,

ஒரு சுற்றுலா வாகனத்திற்கு ஆயுட்கால வரி என்பது 15வருடம் என்று உள்ள நிலையில் 12வருடங்கள் முறையாக வட்டி கட்டிய பிறகு மீண்டும் 15வருடத்திற்கு ஆயுட் கால வரி கட்ட சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது. டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் சுற்றுலா வாகணத்திற்கான ஆயுட்கால வரியை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்

பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான‌ போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு வாடகை கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் கலைந்து சென்றனர்..