மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்ட தீர்ப்பான பொய் வழக்கு போடும் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர்.சரவணன் பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது:
தேசிய சிந்தனையாளர் மாரிதாஸ் மீது முப்படை தளபதி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி திமுக அரசு பொய்வழக்கு பதிவு செய்தது, காவல்துறையினர் அத்துமீறி அழைத்துசென்று பொய் வழக்குப்பதிவு செய்தனர். மாரிதாஸ் மீது புனையப்பட்ட பொய் வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பில் யூடியுப்பர்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என நீதிமன்றம் கூறியுள்ளது,
இந்த தீர்ப்பானது திமுக கொடுங்கோல் அரசுக்கு பாடமாக அமைந்துள்ளது. வழக்கின் தீர்ப்பானது அனைத்து யூடிப்பர்ஸ்களுக்கும் இந்த வெற்றி சேரும், எங்கள் மீதான பொய் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திப்போம், பாஜகவிற்கு எதிராக கூட கருத்து சொல்லட்டும். ஆனால் எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு அதனை மீறினால் நடவடிக்கை எடுப்போம்.
போராட்டம் இல்லையென்றால் சுதந்திரமே கிடைத்திருக்காது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக தலைமை போராட்டத்தை விரும்பவில்லை என்ற கருத்துக்கு சரவணன் பதில் அளித்தார்.