• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நன்றியை மறந்தவர்களுக்கு விஜய் திருநெல்வேலி அல்வா கிண்டி கொடுத்து விட்டார்-ஆர்‌.பி. உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Aug 9, 2026

லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ்அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் ,நீங்கள் யாரை ஏமாற்ற இந்த வேலை செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. ராஜாராம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் இந்த கருத்தை காட்டமாக தெரிவித்தார்கள்.

காவேரி விவகாரத்திற்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் பயனில்லை என்று த.வெ.க அமைச்சர் நிர்மல் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அப்படியானால் தொகுதி வரையறை விவாதத்திற்கு எம்.பிகளே இல்லாத நீங்கள் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூட்டி அதில் தோல்வி அடைந்துள்ளீர்கள்.

பரபரப்பாக இந்த சூழ்நிலையிலே ஒரு நேற்றைய தினம் த.வெ‌.க கட்சி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது .திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ‌அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ராஜாவாக வளம் வந்த விராலிமலை விஜயபாஸ்கர்,கரூர் விஜயபாஸ்கர், தூத்துக்குடி கடம்பூர் ராஜு ,உடுமலை ராதாகிருஷ்ணன், எம் எஸ் ஆனந்தன் போன்ற முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் த.வெ.கவில் கூஜாக்களாக மாறி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெகுமானத்தை எதிர்பார்த்து போனவர்கள் இன்றைக்கு தன்மானத்தை இழந்து நிற்கிறார்கள்.

விராலிமலை விஜயபாஸ்கர் போன்றவர்களுக்கெல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறபோது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் ரோஜா மாலைகளையும் , பொன்னாடைகளையும் அணிவித்து கைகளில் வீரவால், செங்கோல் கொடுத்து இந்த நாட்டை ஆளவாக ராசா என்று மனதார வாழ்த்திய அந்த காட்சிகள் எல்லாம் நமக்கு நினைவுக்கு வருகிறது .அப்படி அழகு பார்த்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தள்ளி வைத்துவிட்டு, த.வெ.விற்கு சென்ற சென்ற நீங்கள் இப்போது அலங்கோலமாக மாறி இருக்கிறீர்களே.

உங்களை ராசாவாக அழகு பார்த்த அண்ணா திமுகவை புறந்தள்ளிவிட்டு, இப்போது த.வெ.க வின் புறம்போக்காக தவிப்பதை பார்க்கிறபோது மனது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

இன்றைக்கு சி..விஜயபாஸ்கர் ,
எம்.ஆர் ‌விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆனந்தன், சிவபதி, திருச்சி வளர்மதி ஆகியோர் ஆளுமை மிக்க பதவியை எதிர்பார்த்து காத்திருந்து, கடவுள் விஜய்யின் கருணை பார்வை ஒரு முறை நம் மீது பட்டுவிடாத ,அதன் மூலம் நமக்கு சாப விமோசனம் கிடைத்து விடாதா? என்று தவமாய் தவமிருந்த அதிமுகவின் முன்னாள் போர்படை தளபதிகளுக்கு இப்போது த.வெ.கவில என்ன பதவி கொடுத்துள்ளார்கள் என்றால், அந்தப் போர் படைத் தளபதிகள் இனிமே போருக்கு செல்லத் தேவையில்லை, போர் கருவிகளை துடைத்து சுத்தப்படுத்தி வைக்கின்ற அலங்கார பதவிகளை வாரி வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய் .

அப்புறம் என்ன அவங்களுக்கெல்லாம் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை கொடுக்காவ முடியும், தவெக கட்சியிலே காலங்காலமாக கொள்கைக்காக வந்து சேர்ந்தவர்களுக்கெல்லாம் இன்றைக்கு விஜய் த.வெ.க கட்சியில் கொள்கை காக்குற பதவிகளை வழங்கி இருக்கிறார்.

ஆளுங்கட்சியில் கொள்ளையடித்து குபேரனாக வரலாம் என்று கனவு கொண்டிருந்த விஜயபாஸ்கர்களுக்கு தலையில் நேற்று இடி விழுந்ததாக செய்தி வந்திருக்கிறது .இப்போது உங்கள் முகத்தை எந்த தைரியத்துடன் வெளியே காட்டப் போகிறீர்கள் ?விஜயபாஸ்கரை சிறுமைப்படுத்துவதற்காகவோ வேதனைப்படுத்துவதற்காகவோ நான் சொல்லவில்லை.

ஆண்டியை நம்பி ஆண்டவனை கைவிட்டு சென்று விட்டது போல, அரசரை நம்பி புருஷனை கைவிட்டு சென்றுவிட்ட பழமொழி தான் இப்போது நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

இப்போது நீங்கள் வெளியே தலை காட்ட முடியாது விராலிமலைக்கு தான் நீங்கள் மாவட்ட செயலாளர் ,மாவட்ட அமைப்பு செயலாளர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் விஜயபாஸ்கர் இருந்தபோது தமிழகம் முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகமாக பிரகாசித்தார் இப்போது விராலிமலை எல்லை தாண்ட கூடாது என்று உத்தரவு மாதிரி ,விராலிமலைக்கு மாவட்ட அமைப்பு செயலாளர்.

மாவட்ட செயலாளர் அல்லது மாவட்ட தலைவர்கள் என்றுதான் கேள்வி பட்டுள்ளோம் மாவட்ட அமைப்பு செயலாளர் என்ற பதவி இதுவரை கேள்விப்படாத செய்தியாக இருக்கிறது. கட்சிகளில் மாநில அமைப்பு செயலாளர் பதவி தான் இருக்கிறது.

கொள்கை மறந்தவர்களுக்கு, கோட்பாடுகளை மறந்தவர்களுக்கு லட்சியத்தை மறந்துவர்களுக்கு , குறிப்பாக நன்றியை மறந்தவர்களுக்கு விஜய் திருநெல்வேலி அல்வா கிண்டி கொடுத்து விட்டார் என்பது செய்தியாக உள்ளது.ஆகவே தான் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் எல்லோருக்கும் மரியாதை ,என்பதை தான் நேற்று த.வெ.ககட்சியின் அறிவிப்பாக உள்ளது

அதிலும் கூட கடம்பூர் ராஜு பதவி கிடைத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை கிராமத்திலே சொல்வார்கள் உள்ளதும் போச்சுடா லொல்ல கண்ணா என்பது போல் ராஜா மாதிரி இருந்த நீங்கள் விஜய்க்கு கூஜா தூக்கு போனீர்கள் என்று உங்கள் மனசாட்சியை உங்களை கொல்லும். வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு ,ஆனால் தோல்வி அடைந்தால் ஓடுவது கோழையின்அடையாளம் .

புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோருக்கு
துரோகம் செய்தால் இதுபோன்று காலம் தீர்ப்புகளை வழங்கும் என்பதற்கு விஜயபாஸ்கரின் பரிதாபங்கள் நமக்கு பாடமாக இருக்கிறது என கூறினார்.