• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மாமல்லபுரத்தில் ட்ரேன்கள் பறக்க தடை

ByA.Tamilselvan

Jul 12, 2022

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருக்க இருப்பதால் மாமல்லபுரம் அதன் சுற்றுபகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் மு தன்முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி வரை இந்தப் போட்டித் தொடர் நடைபெறுகிறது.
இப்போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச அளவில் பல நாட்டு வீரர்களும் வருவதால் சென்னையில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாமல்லபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.