• Sat. Apr 20th, 2024

மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

ByA.Tamilselvan

Jul 12, 2022

மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுத்துள்ளன .எனவே மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்தும் நெரிசல் குறைந்தபாடில்லை. எனவே மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பணிகளானது முடிவடைந்து மதுரையில் மெட்ரோ சேவை முதற்கட்டமாக இரு வழித்தடங்களில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாட்டுத்தாவணியில் தொடங்கும் வழித்தடம் கே.கே.நகர், அண்ணா நகர், தெப்பக்குளம், முனிச்சாலை, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்குவாசல், பெரியார் நிலையம், அரசரடி, காளவாசல், பாத்திமா கல்லூரி, ஆணையர், தபால்தந்தி நகர், பார்க் டவுன் வரை செல்லும்.
மற்றொரு வழித்தடம் கோரிப்பாளையத்தில் தொடங்கி செல்லூர் ரயில் நிலையம், மதுரா கல்லூரி, பசுமலை, திருப்பரங்குன்றம், திருநகர், தோப்பூர் (ஏய்ம்ஸ்), திருமங்கலம் வரை செல்லும். பணிகள் வேகமெடுத்திருப்பதால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *