• Fri. May 15th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

சார் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

ByP.Thangapandi

May 13, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.,

இதில் உசிலம்பட்டி வட்டாட்சியர் கார்த்திகேயன், பேரையூர் வட்டாட்சியர் செல்லப்பாண்டி மற்றும் பல்வோறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.,

இதில் உசிலம்பட்டி பகுதி சுற்றியுள்ள விவசாயிகள் பல கலந்து கொண்டனர்.

இதில் தொடப்பநாயக்கனூர் ஊராட்சியில் உள்ள அஸ்வாமாதி அணை கட்டப்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சீரம் அமைக்கப்படாமல் உள்ளதாகவும் இதனால் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 15 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது இதனை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எட்டூர் இளைஞர் குழு சார்பில் கோரிக்கை வைத்தனர்.,

இதனைத் தொடர்ந்து நல்லதேவன்பட்டி கண்மாயில் உள்ள சீமக்கருவேலம் முட்களை அகற்றி கண்மாயை வரவேண்டும் மேலும் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்தனர்.,

செல்லம்பட்டி ஒன்றியம் கே.நாட்டாபட்டி கிராமத்தில் தனிநபர் பாசன கால்வாயில் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனவும் 8 மாதங்களாக உங்க அலுவலகம் தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமாரிடம் குற்றம் சாட்டியது பரபரப்பு ஏற்படுகிறது.,