• Fri. Mar 29th, 2024

மகளிர் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி

Byதரணி

Sep 23, 2022

மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ஹேண்ட் இன்  ஹேண்ட் இந்தியா சார்பில் நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற்றது.
 மகளிர் தொழில் முனைவோரை முன்னேற்றும் நோக்கத்தில் ஹேண்ட் இன்  ஹேண்ட் இந்தியாவின் நிர்வாக தலைவர் டாக்டர் கல்பனா சங்கர் ஆலோசனை படியும் மூத்த துணை தலைவர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படியும்  முதன்மை பொது மேலாளர் ஜோசப்ராஜ் ஒருங்கிணைப்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கான நான்கு நாள் பயிற்சி காஞ்சிபுரத்தில் உள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் அகாடமியில் நடைபெற்றது.
 இந்த பயிற்சியில் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள  சுய உதவி குழுவினை சேர்ந்த பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினை சேர்ந்த 72 நபர்கள்  கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் தொலைநோக்கு பார்வை , பட்ஜெட் , பண நிர்வாகம், நேர மேலாண்மை , தொழில் உத்திகள் , தொழில் திட்டம், சந்தை ஆய்வு ,டிஜிட்டல் மார்க்கெட்டிங், அடிப்படை கணக்கு வழக்குகள்,பலம் பலவீனங்கள், சமூக வலைதள பயன்பாடு , கடன் ஒழுக்கம், தனிப்பட்ட பிராண்டிங்,கடன் உதவி மற்றும்  நிதி பராமரிப்பு  ஆகிய பல்வேறு தலைப்புகளில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்பட்டது 
வரசக்தி ஹோம் பைனான்ஸ்  சிஇஒ .கல்யாணராமன், இந்த பயிற்சியை துவக்கி வைத்தார். சிட்பி பொதுமேலாளர் ரவீந்திரன், மற்றும் மீனாட்சி சுந்தரம், டெபுட்டி சிஒஒ பெல்ஸ்டார்  ஆகியோர் பயிற்சி நிறைவு விழாவில்  கலந்து கொண்டு சிறந்த தொழில் முனைவோர்களுக்கு  விருதுகளையும்  அனைவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்புரை வழங்கினார்கள்.
தொழில் முனைவோர் தங்களது அனுபவ பகிர்வின்போது இந்த பயிற்சி தங்களது தொழிலை மிகவும் திறம்பட வழிநடத்துவதற்கு பேருதவியாக இருந்ததாகவும் இது போன்ற பயிற்சி தொழில் முனைவோர்களுக்கு மிக மிக தேவையானது எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் . 30க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் தங்களது விசிட்டிங் கார்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் முதல் பரிசு பெற்ற தொழில் முனைவோருக்கு ரூ 3000 ரூபாய் இரண்டாம் பரிசு பெற்றவருக்கு ரூ 2000 ரூபாய் மூன்றாம் பரிசு ரூ 1000 எட்டு பேருக்கு  வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.ஏற்கனவே பயிற்சி பெற்ற தொழில் முனைவோர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இந்த பயிற்சியில் தொழில் முனைவோரின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக கணவன்மார்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது
இந்த 4 நாள் பயிற்சியை  ஹேண்ட் இன்  ஹேண்ட் இந்தியாவின்  உதவி பொது மேலாளர் திரு பன்னீர் தலைமையிலான குழு ஒருங்கிணைத்து நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *