• Tue. Dec 10th, 2024

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு… பள்ளிக் கல்வித்துறை

Byகாயத்ரி

Jun 16, 2022

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதனை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதையடுத்து 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வருகின்ற 18-ஆம் தேதி தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல் நலன், மன நலன் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.