• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

ByKalamegam Viswanathan

May 31, 2023

அவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல். விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு..
மதுரை மாநகராட்சி அவனியாபுரம் 100வது வார்டு ஜே ஜே நகர் பகுதியில் சாலை, சாக்கடை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து செய்து தரக் கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தராததால்.
இதனால் விரத்தி அடைந்த பகுதி மக்கள் இன்று 100க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் சாலை இருபுறமும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், 100வது வார்டு கவுன்சிலர் அய்யனார். மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வ வினாயகம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 1 மணி நேரத்திற்கு பின் போக்கு வரத்து சரி செய்யப்பட்டது..