அருமையான கடல் உணவு வகைகளை அப்பகுதி மக்கள் தாமே தயாரித்து அறுசுவை விருந்தளித்ததோடு ஒரு அழகான புடவையையும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பரிசளித்தனர்.
பழவேற்காடு – அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த, தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பழவேற்காடு மீனவ கிராமப் பெண்கள் அளித்த பாரம்பரிய மீன் உணவு விருந்தில், தமிழச்சி தங்கபாண்டியன், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.ஜெயகுமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அருமையான கடல் உணவு வகைகளை அப்பகுதி மக்கள் தாமே தயாரித்து அறுசுவை விருந்தளித்ததோடு ஒரு அழகான புடவையையும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பரிசளித்தனர்.
“அதானி துறைமுக விரிவாக்க முன்மொழிவு எங்கள் தலைமேல் ஒரு வாள் போல் தொங்கிக் கொண்டிருந்தது; அதனை ரத்துசெய்து, எங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்விடங்களையும் தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் என்று நாங்கள் இப்போது நிம்மதியாக இருக்கிறோம். இந்த விருந்து மூலம் தமிழ்நாடு அரசுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.