• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க சங்கிலியை ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்து சென்றனர் இது குறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி எதிரே அமைந்துள்ள பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதிதாசன். இவரது மனைவி சரோஜா 67, இன்று அவரது வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு நடந்து வரும் வேளையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு நபர்கள் சரோஜாவின் கழுத்தில் இருந்த பதினொரு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். சரோஜா நடந்து செல்லும்போது பின்பக்கமாக சென்று சங்கிலியை பிடித்து இழுத்ததில் அவர் கீழே விழுந்துள்ளார். மேலும் அந்த நபர் சரோஜாவின் சங்கிலியை பிடித்து இழுத்ததும் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டட்டுள்ளது.

இது குறித்து நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்விடம் வந்த போலீசார்  அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களைஆய்வு மேற்கொண்டனர். அதில் இந்த கொடூர காட்சி பதிவாகியுள்ளது, இதனை தொடர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.