

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் அரையாண்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மாநிலங்களில் இருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

குமரியில் மழை ஓய்ந்த நிலையிலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குறைவாக இருந்தாலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் அருவியின் மேற்பகுதியில் உள்ள சுற்றுலா படகு துறையிலும் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றனர்.
