

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
சுனாமியில் உயிரிழந்த 199 நபர்களை நினைவுகூறும் வகையில் இன்று உதகை முள்ளிகூர் பகுதியில் உள்ள அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் நினைவு தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி, அனுசரிக்கப்பட்டது. ஆதரவற்றவர்களுக்கு தேனீர் உபசரிப்பு வழங்கப்பட்டது.

அப்துல்கலாம் பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் பசுமை மற்றும் கல்வி. தஸ்தகீர் தலைமையில் நடைபெற்றது.உடன் சுலைமான், சுந்தர், சுரேஷ், சந்துரு, வினோத், மற்றும் பாபுஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
