தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் பெய்து வரும் தொடர்மழையால் காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலைக்கு உட்சப்பட்சத்திற்க்கு விற்பனையாகின்றன.
தக்காளியைப் பொறுத்தவரை விலை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கோயம்பேடு மார்க்கெடில் ரூ.180க்கு விற்பனை ஆனது.
கேரளாவைப் பொறுத்தவரை நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.115க்கு விற்றது. இதனால், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் படிக்கல் என்ற ஊரில் தக்காளியை பாலிதீன் கவரில் ‘பேக்’ செய்து விற்கின்றனர். இரண்டு தக்காளி கொண்ட பாக்கெட் ரூ.18க்கு விற்பனை செய்யப்படுகிறது.