டோலிவுட்டின் ஹீரோ லிஸ்டில் முதன்மை வகிக்கும் ராம்சரண், வெப்தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் மார்ச் 25ம் தேதி ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள RRR திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது!
தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், சிறுத்த (தெலுங்கு) படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்! ராம்சரண் அப்பா சிரஞ்சீவியுடன் இணைந்து ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார். RRR படத்தைத் தொடர்ந்து அந்த படமும் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
RRR, ஆச்சார்யா, ஷங்கர் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பெரிய லைன் அப்களை வைத்துள்ள நடிகர் ராம்சரண் ஒடிடியில் விரைவில் உருவாகவுள்ள பிரம்மாண்ட வெப் தொடரில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய சந்தையை பிடிக்க பல பெரிய ஒடிடி நிறுவனங்கள் முன்னணி நடிகர்களை வெப் தொடர்களில் நடிக்க வைத்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி உள்ள ருத்ரா வெப் தொடர் ஹாலிவுட்டில் வெளியான லூதர் எனும் வெப் தொடரின் ரீமேக் தான். இந்நிலையில், அதே போல அமெரிக்காவில் பிரபலமடைந்த மிகப்பெரிய வெப் தொடர் ஒன்றின் ரீமேக்கில் தான் ராம்சரணை நடிக்க வைக்க பிரபல ஒடிடி நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ராம்சரணும் அந்த வெப்தொடரில் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், அந்த ஒடிடி தொடர் தொடர்பான அறிவிப்பு பெரிய அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.