• Tue. Feb 18th, 2025

டைட்டில் வைக்கல! ஆனா ஷுட்டிங் முடிச்சாச்சு!

விஜய் சேதுபதியின் 46 வது படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்கவில்லை! ஆனால் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் முடித்து விட்டார்கள்.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு VJS 46 என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. டைரக்டர் பொன்ராம் இயக்கி உள்ள இந்த படம் சன் பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.

கிராமத்து பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி போலீஸ் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக 2018 ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடித்துள்ளார்.

2021 ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த படம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் கட்ட ஷுட்டிங் திண்டுக்கல்லில் துவங்கப்பட்டது. தற்போது இறுதிக்கட்ட ஷுட்டிங் செங்கல்பட்டில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பெண் போலீஸ் ரோலில் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் இணைந்துள்ளதாக பொன்ராம் கடந்த மாதம் அறிவித்தார்.

இது கிராமத்து கதை, மாவட்டத்தில் உள்ள போலீசாரை பற்றிய படம் என பொன்ராம் தனது பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். ஆனால் இந்த படத்தின் டைட்டில், டீசர், ஃபஸ்ட் லுக் என எது பற்றியும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் சத்தமே இல்லாமல் ஷுட்டிங் மொத்தத்தையும் முடித்து விட்டார்கள்.

பொதுவாக விஜய் சேதுபதி படம் என்றால் விளம்பரங்கள் வெளியிடப்படுவது சகஜம்! ஆனால் இந்த படம் பற்றிய தகவல்கள் மிக குறைவாக வந்துள்ளதே! என்ன காரணமாக இருக்குமென்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்!