• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்.. கட்டணமின்றி பயணிக்கும் வாகனங்கள்..

Byகாயத்ரி

Oct 3, 2022

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சுங்கச் சாவடியில் உள்ள மற்ற ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றனர் என்றும் கடந்த 2 நாட்களாக அந்த சுங்கச்சாவடியில் எந்தவித கட்டணமும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போராட்டம் செய்து வரும் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.