• Tue. Apr 30th, 2024

இன்று ராம நவமி : ஆஞ்சநேயர் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்

Byவிஷா

Apr 17, 2024

இன்று ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால், காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இன்று ராம நவமி விழாவையொட்டி, நாடு முழுவதுமே பக்தர்கள் ஆஞ்சநேயர் கோவில்களிலும், ராமர் ஆலயங்களிலும் அதிகாலை முதலே குவிந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆஞ்சநேயர் ஆலயங்களில் இன்று அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. சித்திரை மாதத்தில் வரும் நவமி திதியில்தான் ஸ்ரீராமர் அவதரித்தார் என்பது புராணம். இதனால் சில இடங்களில் சித்திரை மாத வளர்ப்பிறை தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்தி விழாவாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.
இன்று ராம நவமி தினம் கொண்டாடப்படும் நிலையில், இன்று ராம நாம மந்திரத்தை உச்சரித்தால் அனைத்து கடவுள்களின் ஆசியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நன்மங்கலம் பகுதியில் உள்ள த்ரிநேத்ர தசபுஜ வீர மங்கள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று மூல மந்திரி ஜெப ஹோமங்கள் மூலவருக்கு தங்கக்கவசம் அணிவித்தல் போன்றவை நடைபெற்ற நிலையில், ராம நவமியை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து சீதாராம கல்யாண திருவிழாவும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *