• Fri. Jan 17th, 2025

மக்களவைத் தேர்தல் எதிரொலி : டாஸ்மாக் இன்று முதல் 5 நாட்கள் விடுமுறை

Byவிஷா

Apr 17, 2024

மக்களவைத் தேர்தலின் எதிரொலியாக டாஸ்மாக் கடைகள் 17 முதல் 19 வரை மூன்று நாட்களும், ஏப்ரல் 21 மகாவீர்ஜெயந்தி மற்றும் மே 1 உழைப்பாளர் தினம் என மொத்தம் 5 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மொத்தம் மூன்று நாட்களுக்கு டாஸ்மார்க் மதுபான கடைகள் மற்றும் அனைத்து மதுபான விற்பனை கூடங்கள் மற்றும் நிலையங்களும் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஏப்ரல் 21ம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினங்களை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும், மதுபான சில்லறை விற்பனை கூடங்களும், உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் மற்றும் கூடங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது