• Thu. May 16th, 2024

கவிஞர்கள் தினத்தை கொண்டாடிய சிவகங்கை கலெக்டர்

ByG.Suresh

Apr 29, 2024

தமிழ்க் கவிஞர் தினத்தை முன்னிட்டு, புலவர் ஓக்கூர் மாசாத்தியார் ,புலவர் கணியன் பூங்குன்றனாரின் நினைவுத்தூணிற்கு, ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை .எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய “வைர நிலம்”! என்ற நூலை வழங்கினார்.

தமிழ்க் கவிஞர் தினமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 29-ஆம் தேதியன்று, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூரில் சங்ககால நல்லிசைப்புலவரான ஒக்கூர் மாசாத்தியாருக்கு தமிழக அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூணிற்கு ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மகிபாலன்பட்டியில் சங்கப்பெரும் புலவர் கணியன் பூங்குன்றனாரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூணிற்கும் இந்தாண்டு முதல் மலர்த்தூவி, மரியாதை செலுத்திடும் அடிப்படையில், தமிழ்க் கவிஞர் தினத்தையொட்டி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒக்கூரில் நிறுவப்பெற்றுள்ள சங்கால நல்லிசைப் புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்களால், மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஈஸ்வரன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அவர் எழுதிய “வைர நிலம்”! என்ற நூலை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *