• Thu. May 16th, 2024

கோவையில் மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

BySeenu

Apr 29, 2024

கோவையில். நடைபெற்ற நாராயண் சேவா சன்ஸ்தானின் இலவச செயற்கை மூட்டு அளவீட்டு முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்ற ஆப்ரிக்க நாடுகளிலும். மாறறுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக இவ்வமைப்பின் முகாம் கோவையில் நடைபெற்றது. சோமையாம்பாளையம் கே.என்.ஜி.புதூர் பகுதியில் உள்ள மகேஸ்வரி பவன் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமில் கோவை, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி என பல்வேறு தமிழகத்தின் மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளின் கை அல்லது கால் மூட்டுகளின் அளவீடுகள் மருத்துவர்கள் நேஹா, அனிக்தா, ராம்நாத் தாக்கூர் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் செயற்கை மூட்டு மற்றும் காலிபர்களுக்கான அளவீடுகள் எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு அடுத்த கோவை முகாமில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செயற்கைக் கருவிகள் பொருத்தப்படும் என முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹரிபிரசாத் லத்தா குறிப்பிட்டார்.
முன்னதாக முகாம் துவக்க விழாவில், மகேஸ்வரி சங்கத்தின் தலைவர் கோபால் மகேஸ்வரி, மகேஸ்வரி பவன் செயலாளர் சந்தோஷ் முண்டாடா, மஹாகங்கோத்ரியின் தலைவர் ரஜத் கவுர், மேவார், செய்தி தொடர்பாளர் பகவான் பிரசாத் கவுர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *