• Fri. Dec 13th, 2024

மதுரை பிரளயநாத சிவன் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி மகாயாகம்

ByN.Ravi

Apr 29, 2024

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரளயநாத சிவன் விசாக நட்சத்திர ஆலயத்தில் மே.1-ம் தேதி மாலை குருப்பெயர்ச்சி மகாயாகம் நடைபெறுகிறது.
குருபகவான், 1.05.24..புதன்கிழமை , மேஷ ராசியிலிருந்து, ரிசப ராசிக்கு பெயர்வதை ஒட்டி, இக்கோயிலில் அன்று மாலை 4.30 மணிக்கு குரு ப்ரீதி ஹோமங்களும், நவகிரக ஹோமங்கள் நடைபெறுகிறது.
வேதியர்கள் குழு இந்த சிறப்பு யாகங்களை நடத்துகிறது. இதையடுத்து குரு பகவானுக்கு, பால், மஞ்சள்பொடி, இளநீர், சந்தனம் போன்ற திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ராசி நேயர்களுக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
இக் கோயிலின் ஸ்தல மூர்த்தி சனீவரன், சுவாமியானவர் ராகுவுக்கு உகந்தர்.
சனீஸ்வரன், ராகு, குரு ஆகிய இணைந்த கோயிலாகும்.
இக்கோயிலின் சனீஸ்வர பகவான் லிங்க வடிவில், வன்னிமரம் தடியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம்.வி.எம். மணி, பள்ளித் தாளாளர் எம். மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி.பூபதி ஆகியோர்கள் செய்து வருகின்றனர்.