• Fri. Jun 9th, 2023

வீரபத்ரன் ராமநாதன் பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Nov 24, 2021

வீரபத்ரன் இராமநாதன் என்பவர் எட்வர்ட் ஏ. ஃப்ரைமேன் காலநிலை நிலைத்தன்மை ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராபி, கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோவில் தலைவர் ஆவார்.மதுரையில் 1944 நவ., 24ல் பிறந்தார். சிறு வயதிலேயே, இவரது குடும்பம் பெங்களூரில் குடியேறியது.

அண்ணாமலை பல்கலையில் பொறியியல் படிப்பு; இந்திய அறிவியல் கழகத்தில் முதுநிலைப் படிப்பு முடித்தார்.அமெரிக்காவின் நியூயார்க் மாநிலக் கல்லுாரியில், முனைவர் பட்ட ஆய்வுக்காக சேர்ந்தார். வெள்ளி, செவ்வாய் கிரகங்களின் சூழலில், ‘க்ரீன் ஹவுஸ்’ விளைவு பற்றி ஆய்வு மேற்கொண்டார். ‘குளோரோ ப்யூரோ கார்பனால்’ தான், புவி
வெப்பமடைகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க, சூரிய சக்தியை பயன்படுத்துவதே சிறந்தது என்பதை வலியுறுத்தினார். உ.பி., மாநிலம் கைரத்பூர் கிராமத்தில் சூரிய சக்தி சமையல் அடுப்பு, ஒளி வழங்கும், ‘சூரியா’ திட்டத்தை துவக்கினார். ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை வளிமண்டல அறிவியல் மைய இயக்குனராக பொறுப்பு வகிக்கிறார். விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன் பிறந்த தினம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *