• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை எஸ்.சோமு காலமான தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 9, 2021

தஞ்சையில், 1919 பிப்., 9ல் பிறந்தவர், எஸ்.சோமசுந்தரம். இவர் தந்தையின் பூர்வீகமான மதுரையை தன் பெயரில் சேர்த்து, ‘மதுரை எஸ்.சோமு’ என மாற்றிக் கொண்டார்.சித்துார் சுப்பிரமணிய பிள்ளையிடம், 14 ஆண்டுகள் குரு குலவாசம் இருந்து கர்நாடக இசை பயின்றார். தன் முதல் கச்சேரியை, 1934ல் திருச்செந்துாரில் நிகழ்த்தினார்.

கர்நாடக சங்கீதம் மட்டுமின்றி, மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதிலும் சிறப்பு பெற்றிருந்தார்.கேரளத்துக்குச் சென்றால், ஸ்வாதி திருநாள் கீர்த்தனைகளைப் பாடுவார். கன்னடத்தில் புரந்தரதாசர் கீர்த்தனைகளையும் பாடுவார். ஹிந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகவும், தமிழக அரசின் அரசவை கவிஞராகவும், காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவானாகவும் நியமிக்கப்பட்டார். தெய்வம் படத்தில், ‘மருதமலை மாமணியே முருகையா…’ என்ற பாடலை பாடினார். 1989 டிச., 9ம் தேதி தன் 70வது வயதில் காற்றில் கலந்தார்.மதுரை எஸ்.சோமு காலமான தினம் இன்று!