• Wed. Mar 22nd, 2023

ஷோலேவின் நாயகன் தர்மேந்திரா பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Dec 8, 2021

தர்மேந்திரா எனும் தரம் சிங் தியோல் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பண்முகம் கொண்டவர். தர்மேந்திரா 1935 டிசம்பர் 8 ஆம் நாள் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் கேவல் கிஷன் சிங் தியோல் மற்றும் சத்வந்த் கவுர் ஆகியோருக்கு பஞ்சாபி ஜாட் சீக்கியர் குடும்பத்தில் பிறந்தார்.

இவரது ஆரம்ப வாழ்க்கையை சஹ்னேவால் கிராமத்தில் கழித்தார். லூதியானாவின் லால்டன் கலனில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கு இவரது தந்தை கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். 1952 இல் இவர் பக்வாராவின் ராம்கரியா கல்லூரியில் இடைநிலை படிப்பை மேற்கொண்டார். 1997 ஆம் ஆண்டில், இந்தி சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.

இவர் இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் மிக வெற்றிகரமான நடிகர்களில் ஒருவர் . இவரது நடிப்பிற்கு அசராத ஆட்களே இல்லை என்று தான் சொல்லவேண்டும். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் ஒன்று 1975 ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படப் பாத்திரமாகும்.

இவர் ராஜஸ்தானில் உள்ள பிகானேர் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தியாவின் 14 வது மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். 2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசண் விருது இவருக்கு இந்திய அரசால் வழங்கப்பட்டது. இத்தகைய ஆற்றல் மிக்க பல கலை கற்றவரான தர்மேந்திரா பிறந்த தினம் இன்று..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *