1950 ஜூலை 11ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் பிறந்தவர் சந்திரபோஸ். தன் 12வது வயதிலேயே, ‘பாய்ஸ்’ நாடக கம்பெனியில் நடிகராக பணியாற்றினார். ‘மணிமகுடம், பராசக்தி’ நாடகங்களில் நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில், அவர் பாடிய, ‘ஏண்டி முத்தம்மா…’ என்ற பாடல் வரவேற்பை பெற்றது.கடந்த 1977-ல் மதுரகீதம் படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து அண்ணா நகர் முதல் தெரு, ராஜா சின்ன ரோஜா உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார்.
‘நீலக் குயில்கள் ரெண்டு, சின்ன சின்ன பூவே, போன்ற அற்புதமான ‘மெலொடி’ பாடல்களை கொடுத்தார். சில ‘டிவி’ தொடர்களுக்கும் இசையமைத்தார்.மற்றும் சில படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்தார். 2010 செப்., 30ம் தேதி தன் 60வது வயதில் காற்றில் கலந்தார். மெலடி இசைமன்னன் சந்திரபோஸ் காலமான தினம் இன்று!