• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சீனி.விசுவநாதன் பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Nov 22, 2021

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில், 1934 நவம்பர் 22ல் பிறந்தவர் சீனி.விசுவநாதன். தந்தை பி.வி. சீனிவாசன், தாய் கமலாம்பாள். இவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவருக்கு பள்ளி பருவத்திலேயே, பாரதியின் கவிதைகள் மீது தீராத ஆர்வம் ஏற்பட்டது. இலக்கிய ஆர்வலர் சின்ன அண்ணாமலையின் அறிவுறுத்தலால், ‘பாரதி’ பதிப்பகத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.பின், ‘மேகலை’ எனும் பதிப்பகத்தை துவக்கினார்.கடந்த 1962ல், ‘தமிழகம் தந்த மகாகவி’ என்ற தொகுப்பு நுாலை வெளியிட்டார். அன்று முதல் இன்று வரை, பாரதியார் நுால்களை மட்டுமே பதிப்பித்து வருகிறார். பாரதி குறித்து அச்சில் வராத பல அரிய தகவல்களையும் எழுத்துகளையும் இவர் பதிப்பித்துள்ளார்.


கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், பாரதி நுாற்பெயர்க் கோவை ஆகிய நுால்கள் இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாடு அரசின் 2004 ஆம் ஆண்டுக்கான பாரதியார் விருது பெற்றவர். இவர் எழுதிய “பாரதி தேடல்கள்: சில நினைவலைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இப்படிபட்ட பாரதியின் நினைவலைகளை தூண்டிய கவிஞர் சீனி.விசுவநாதன் பிறந்த தினம் இன்று!